Slug
10 ஒப்புதல் "இந்த நிமிஷத்திலிருந்து, உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது. எக்காரணத்தைக் கொண்டும் நீங்க என் மாமியார் வீட்ல காலடி எடுத்து வைக்கக் கூடாது. நான் செத்தாலும் என் சாவுக்கு நீங்க வரக்கூடாது" என்றாள் ஆழ்வி தீர்க்கமாக. கற்பகமும் சொல்லின்செல்வனும் அதிர்ச்சியோடு நின்றார்கள். "அவ நம்ம மேல கோவமா இருக்கா. அதனால தான் இப்படி எல்லாம் பேசுறா. எல்லாம் சரியாயிடும்" என்றான் சொல்லின்செல்வன் தன்னை சுதாகரித்துக் கொண்டு."ஆமா, அவ எந்த அளவுக்கு என் மேல பிரியம் வச்சிருக்கான்னு எனக்கு தெரியாதா?" என்றார் கற்பகம்."நான் உங்க மேல பிரியமா தான் இருந்தேன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும்! ஆனா இனிமே அந்த பிரியம் இருக்காது. ஏன்னா, என்னோட அன்புக்கு நீங்க தகுதியானவங்க இல்ல." என்றாள் உறுதியுடன்."உனக்கு கிடைச்சிருக்கிற வாழ்க்கைக்காக ஒரு நாள் நீ எனக்கு நன்றி சொல்லுவ பாரு""எனக்கு எந்த மாதிரி வாழ்க்கை கிடைக்கப் போகுதுங்குறது இந்த விஷயமே இல்ல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட பேசினீங்க பாரு... அது தான் விஷயம். நான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். ஆனா நீங்க என்ன சொன்னீங்க? நான் சுயநலவாதியா? அப்படியே இருக்கட்டும்... நீங்க பணத்தை வச்சுக்கிட்டு சந்தோஷமா இருங்க"தன் அறைக்குச் சென்று கதவை சாத்தாமல் நின்று, "கல்யாணத்தைப் பத்தி நித்திலாகிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க யாரும் பேச வேண்டியதில்ல" என்று கூறிவிட்டு கதவை சாத்திக்கொண்டாள்.இன்பவனம்இனியவன் இருந்த அறையின் கிரில் கேட்டின் வழியாக ஒரு கிளாஸ் பாலை உள்ளே வைத்தான் முத்து. அவன் அதை குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான். அதை குடித்த இனியவன், அரை மயக்க நிலைக்குச் சென்றான். தன் பெருவிரல் ரேகையை சென்சாரில் அழுத்தி, அந்த கதவை திறந்தான் சித்திரவேல். மூன்று வேலையாட்கள் அந்த அறையினுள் நுழைந்து இனியவனை குளியலறைக்கு தூக்கி சென்றார்கள். இந்த விதத்தில் தான் அவனை குளிக்க வைப்பது வழக்கம். இல்லாவிட்டால் அவனை குளிக்க வைப்பதெல்லாம் நடக்கும் காரியம் இல்லை அல்லவே!ஒரு துடைப்பத்துடன் வந்த முத்து, அந்த அறையை கூட்டி சுத்தப்படுத்தினான். கட்டிலின் அடியில் அவன் பெருக்கிய போது, ஏதோ ஒன்று வெளியே வந்து விழுந்தது. அதை பார்த்த முத்து குழப்பத்துடன் முகத்தை சுருக்கினான். அது பெண்கள் தங்கள் கூந்தலில் அணியும் கிளிப்.
அதை கையில் எடுத்த முத்து, அந்த கிளிப்பின் முனையில் ஒரு சிறு துளி ரத்தம் இருந்ததை கவனித்தான். அந்த ரத்த துளியை பார்த்தவுடன் அவனுக்கு புரிந்து போனது. அது யாருடையது என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். அந்த முனையை, தன் விரலால் லேசாய் தடவிப் பார்த்தான். அது சதையை கிழிக்கும் அளவிற்கு கூர்மையாய் இருந்தது. இதை வைத்துத்தான் ஆழ்வி தன் கையை கிழித்து இனியவனிடமிருந்து தன்னை காத்துக் கொண்டிருக்க வேண்டும். அதை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். அந்த அறையை சுத்தப்படுத்தி முடித்த பிறகு, அதை பார்கவியிடம் கொடுப்பது என்று அவன் தீர்மானித்தான்.........சோகமே வடிவாய் பாட்டியின் மடியில் படுத்திருந்தாள் பார்கவி. அப்போது அங்கு வந்தாள் நித்திலா. அவளைப் பார்த்தவுடன் சட்டென்று தன் கண்களை மூடி கொண்டாள் பார்கவி. அவர்களுக்கு எதிரில் அமர்ந்தாள் நித்திலா. "யாரோ என் மேல கோவமா இருக்கிற மாதிரி தெரியுது?" என்றாள் அவள் பார்கவியை பார்த்தவாறு. அதற்கு பார்கவியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. "நான் இப்போ செய்றதெல்லாம் இன்னுவோட நல்லதுக்காக தான் செய்றேன்"கோபமாய் எழுந்தமர்ந்தாள் பார்கவி."அதுக்காக ஆழ்வியோட வாழ்க்கையை நாசப்படுத்துவியா நீ? அதை செய்யிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது? அவ ஏழை பொண்ணுங்கறத்துக்காக நீ என்ன வேணா செய்வியா?""நான் அவங்ககிட்ட ரிக்வெஸ்ட் பண்ணி தான் கேட்டேன். அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காம போறதும், முழுக்க முழுக்க அவங்களோட விருப்பம் தான்""இல்ல... உனக்கு அவங்க அம்மாவையும் அண்ணனையும் பத்தி தெரியாது. அவங்களை மாதிரி பேராசை புடிச்சவங்க இந்த உலகத்திலேயே கிடையாது. பணத்துக்காக அவங்க அவளை கட்டாயப்படுத்த நிச்சயம் தயங்க மாட்டாங்க"நித்திலா ஏதோ கூற நினைத்த போது, அவளது கைபேசி மணி ஒலித்தது. அந்த அழைப்பு ஒரு புதிய எண்ணில் இருந்து வந்தது. இருந்தபோதிலும் அவள் அதை ஏற்றாள்."ஹலோ யார் பேசுறீங்க?""நான் ஆழ்வி" "ஆழ்வி நீங்களா?" ஆர்வத்துடன் எழுந்து நின்றாள். "உங்க தம்பியை கல்யாணம் பண்ணிக்க நான் தயாரா இருக்கேன்" என்றாள் இறுகிய குரலில்.நித்திலாவின் கண்கள் குளமாயின. தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள அவள் தன் உதட்டை கடித்தாள். அவளது முக பாவத்தை கண்ட பாட்டியும், பார்கவியும், ஆழ்வி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று எண்ணினார்கள். பார்கவி நிம்மதி பெருமூச்சு விட்டாள். "தேங்க்யூ சோ மச், ஆழ்வி. தேங்க்யூ சோ மச். நீங்க எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவி செய்றீங்கன்னு உங்களுக்கு தெரியாது. எனக்கு போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருக்கு""ம்ம்ம்" அழைப்பை துண்டித்தாள் ஆழ்வி. தன் கைபேசியை நெஞ்சோடு அணைத்தவாறு சிரித்தபடி கண்ணீர் சிந்தினாள் நித்திலா. பேய் அறைந்தவளை போல் அவளைப் பார்த்துக் கொண்டு நின்ற பார்கவி, கோபமாய் அங்கிருந்து வெளியேறினாள். "கவி, நில்லு" என்று கண்டிப்புடன் கூறினாள் நித்திலா. அப்படியே நின்ற பார்கவி, அவளை திரும்பி பார்க்கவில்லை "ஆழ்வி இன்னுவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டாங்க. ஒருவேளை நீ ஏதாவது பண்ணி, இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைச்சா, நான் சும்மா இருக்க மாட்டேன். புரிஞ்சுதா?" எச்சரித்தாள் அவள். கோபம் கொப்பளிக்கும் பார்வையை அவள் மீது வீசிவிட்டு அங்கிருந்து சென்றாள் பார்கவி. ஹோட்டல் ப்ளூ மௌண்டன் அந்த புகழ் பெற்ற ஹோட்டலில் இருந்த குடும்ப அறையில் அமர்ந்திருந்தாள் பார்கவி. அவள் யாருக்காகவோ காத்திருப்பதாக தெரிந்தது. யாரோ அவளது தோளை தொட, திடுக்கிட்டாள். தனக்கு பின்னால் நின்றிருந்தது யார் என்பதை அறிந்து கொண்ட அடுத்த நிமிடம், அவனை அணைத்துக்கொண்டு அழத் துவங்கினாள். "நல்ல காலம் நீங்க வந்துட்டீங்க, குரு" என்றாள் அழுதபடி.இனியவன் கட்டிக் காத்து வந்த மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் மேலாளர் தான் குரு என்னும் குருபரன். அவன் இனியவனின் நெருங்கிய நண்பனும் கூட. பார்கவிக்கு சிறுவயதில் இருந்தே குருவின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அது காதலாய் மலர்ந்தது. வியாபார விஷயமாய் குருபரன் ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர் சென்றான். இன்று தான் திரும்பி வந்திருக்கிறான். அவன் இந்தியாவில் இல்லாவிட்டாலும் கூட, இன்பவனத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அவனுக்கு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தாள் பார்கவி."அழாத கவி, ரிலாக்ஸா இரு" என்று அவளை நாற்காலியில் அமர வைத்தான்.இன்னொரு நாற்காலியை அவள் அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்து, "என்ன ஆச்சு? இனியா எப்படி இருக்கான்?" என்றான். "அவர் நல்லா இருக்காரு. அக்கா அவருக்கு கல்யாண ஏற்பாடு செய்யறாங்க""ஆழ்வியோடவா?"ஆம் என்று தலையசைத்தாள்."ஆழ்வி அதுக்கு ஒத்துக்கிட்டாங்களா?""இப்ப தான் சம்மதம் சொன்னா" "உனக்கு என்ன பிரச்சனை?" "என்னை குற்ற உணர்ச்சி கொல்லுது. அவ என்னை அண்ணன்கிட்ட இருந்து காப்பாத்தினா. ஆனா, அப்படி செஞ்சதுக்காக இன்னைக்கு அவ ஒரு மோசமான சூழ்நிலையில தள்ளப்பட்டு இருக்கா""நீ ஆழ்வி மேல வச்சிருக்கற அக்கரையை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு. ஆனா நீ இனியாவை பத்தி யோசிச்சு பாத்தியா?""அவர் சுயநினைவிலேயே இல்லையே, குரு... கிட்டத்தட்ட அவரு மிருகத்துக்கு இணையா இருக்காரு. தன் கூட பிறந்த தங்கச்சிக்கு அவருக்கு வித்தியாசம் தெரியலையே...!""அவன் குணமாகணும்னு நீ நினைக்கலையா?" "அதுக்கு ஆழ்வியால என்ன செய்ய முடியும்?""வேற யாருமே செய்யாததை அவங்க செஞ்சிருக்காங்க... இனியாவை கண்ட்ரோல் பண்ணி இருக்காங்க. அதனால தான் அவங்களை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நித்திலா நினைக்கிறாங்க. ஆழ்வியால அவனை மாத்த முடியும்னு அவங்க நம்புறாங்க""அதை செய்ய, அவ எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் தெரியுமா?""அவங்க ஏற்கனவே கஷ்டமான காலகட்டத்தில் தான் இருக்காங்க"பார்கவி கண்களை மூடி தேம்பினாள்."நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவங்களை எது சந்தோஷப்படுத்தும்னு நினைக்கிற? ஒரு வேலை போட்டு கொடுத்துட்டா அவங்க நிம்மதியா இருப்பாங்களா? நிச்சயமா முடியாது. ஏன்னா, அழிக்கவே முடியாத ஒரு மோசமான நினைவு அவங்களுடைய புத்தியில ஸ்டோர் ஆயிடுச்சு. அதை அவங்களால எப்பவுமே மறக்க முடியாது. வாழ்நாள் முழுக்க அவங்களை அது உறுத்திக்கிட்டே இருக்கும். ஒருவேளை அவங்களை கல்யாணம் பண்ணிக்க போற ஒருத்தன் சந்தேக பேர்வழியா இருந்தா என்ன ஆகும்? அவன் கூட அவங்களால நிம்மதியா இருக்க முடியுமா? அவங்க சொல்றதை யார் நம்புவா? ஒரு மனநோயாளியால அவங்க தொடப்பட்டு இருக்காங்க. ஆம்பளைங்களை பத்தி உனக்கு தெரியாது. அவனுங்க எல்லா அயோக்கியத்தனத்தையும் செய்வானுங்க. ஆனா தன் பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கணும்னு நினைப்பானுங்க. இந்த உலகம் ஆழ்வியை நிம்மதியா இருக்க விடாது கவி. அவங்க உன் குடும்பத்துக்கு வர போறதை நினைச்சு சந்தோஷப்படு"கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பார்கவி. "தெரிஞ்சோ தெரியாமலோ இனியா அவங்க வாழ்க்கையில என்டர் ஆயிட்டான். அவன் அவங்களுடைய மொத்த வாழ்க்கையா மாறட்டும். நம்ம இனியாவை அவங்க திரும்பிக் கொண்டு வரட்டும்""ஒரு பொண்ணா இருந்துகிட்டு, என்னால இந்த விஷயத்தை உங்களை மாதிரி அவ்வளவு சுலபமா எடுத்துக்க முடியல""நீ செய்ய வேண்டியதெல்லாம், அவங்க கூட இரு... அவங்களுக்கு பக்க பலமா தோளோடு தோள் நில்லு. எக்காரணத்தைக் கொண்டும் அவங்களை விட்டுக் கொடுத்துடாத.""உண்மையிலேயே அண்ணன் கல்யாணத்தை நெனச்சு நீங்க சந்தோஷப்படுறீங்களா?"எதையும் மாத்தாம எந்த மாற்றமும் ஏற்படாது. நம்ம அவனை ட்ரீட் பண்ற முறையை மாத்தணும். நீயோ, நித்திலாவோ, பாட்டியோ அதை செய்ய முடியாது. இதுவரைக்கும் நான் ஆழ்வியை பார்த்ததே இல்ல. ஆனாலும் எனக்கு என்னமோ நல்லது நடக்கும்னு தோணுது"பெருமூச்சு விட்டாள் பார்கவி. "நல்லதையே நினைப்போம்"சரி என்று தலையசைத்தாள் பார்கவி...........அழைப்பு மணியின் ஓசை கேட்டு கதவை திறந்தார் கற்பகம். உள்ளே நுழைந்த தன் தோழி தமிழரசியை பார்த்த அவரது முகம், பேய்றைந்தது போல் மாறியது. தமிழரசி ஒரு வழக்கறிஞர். அவருக்கு ஆழ்வி என்றால் உயிர். அவர்களை சந்திக்க அவருக்கு நேரமே கிடைப்பதில்லை என்றாலும், நேரம் கிடைக்கும் போது அவர்களை சந்திக்க அவர் மறப்பதில்லை. அவரைப் பார்த்து சங்கடத்துடன் சிரித்தார் கற்பகம்."எப்படி இருக்க, கற்பு?""நான் நல்லா இருக்கேன். என்ன நீ திடீர்னு வந்திருக்க?"இன்னைக்கு லீவ் கிடைச்சது. அதனால உன்னையும் ஆழ்வியையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அவ எப்படி இருக்கா?""நல்லா இருக்கா. பரீட்சை எல்லாம் முடிஞ்சிடுச்சு""எங்க அவ?""ஆழ்வி..." அவளை அழைத்தார் கற்பகம்.இறுகிய முகத்துடன் வெளியே வந்த ஆழ்வியின் மனநிலை தமிழரசியை பார்த்தவுடன் சட்டென்று மாறியது."எப்ப வந்தீங்க ஆன்ட்டி?""இப்ப தான் வந்தேன்""எப்படி இருக்கீங்க?""நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? "அவருக்கு பதில் கூறாமல் கற்பகத்தை ஏறிட்டாள் ஆழ்வி. யோசனையுடன் கண்களை சுருக்கினார் தமிழரசி."நல்லா இருக்கேன். எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கு""என்னது? கல்யாணமா? எப்போ? மாப்பிள்ளை யாரு?" கேள்விகளை அடுக்கினார் தமிழரசி."இன்னைக்கு தான் முடிவாச்சு"அவள் குரலில் இருந்த மகிழ்ச்சியின்மையை உணர்ந்தார் தமிழரசி. "இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா?""ஏன் இல்ல? அவளுக்கு சந்தோஷம் தான்" என்றார் கற்பகம் முந்திக்கொண்டு.அவரை சந்தேகத்தோடு ஏறிட்டார் தமிழரசி. அவருக்கு கற்பகத்தையும் ஆழ்வியையும் நன்றாகவே தெரியும். கற்பகம் வசதியாய் வாழ விருப்பப்பட்டவர். ஆழ்வி மூலமாக அதை பெறுவதற்காகவே அவர் அவளை தயார் செய்து வந்தார். ஆழ்வியும் தன் அம்மாவுக்கு அப்படி ஒரு வாழ்க்கையை தர வேண்டும் என்று மனதார விரும்பினாள். அப்படி இருக்கும் போது, அதை நிறைவேற்றி வைக்காமல், எப்படி அவள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்? "உன்னோட மிஸ்டர் என்ன பண்றாரு?"பதற்றத்தோடு அவளை பார்த்துக் கொண்டு நின்றார் கற்பகம்."இப்போதைக்கு அவர் எதுவும் செய்யல" என்றாள் மெல்லிய குரலில்."ஏன்?""அவர் டிரீட்மெண்ட்ல இருக்காரு""ட்ரீட்மென்ட்டா? என்ன ட்ரீட்மென்ட்? ட்ரீட்மெண்ட்ல இருக்கிற ஒருத்தரை ஏன் கல்யாணம் பண்ணிக்கிற?"அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சா, குணம் ஆயிடுவாருன்னு அவங்க குடும்பத்துல இருக்குறவங்க நினைக்கிறாங்க""என்ன பைத்தியக்காரத்தனம் இது? யார் அவன்? அவனுக்கு என்ன பிரச்சனை? எதுக்காக இப்படி ஒரு கண்டிஷனோட நீ கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட?""அவர் பேரு இனியவன் பாலகுமாரன்...""என்ன்னன? யூ மீன், ஐபிகே? பிகே இண்டஸ்ட்ரீஸ் சிஈஓவா ?" என்றார் நம்ப முடியாமல்.ஆம் என்று தலையசைத்தாள் ஆழ்வி. திகைத்து நின்றார் தமிழரசி."உனக்கு அவனை தெரியுமா?" என்றார் கற்பகம்."யாருக்கு தான் அவரைத் தெரியாது?"அதுவரை அவன் இவன் என்று பேசிக் கொண்டிருந்த தமிழரசி, அவர் என்று அவனுக்கு அளித்த மரியாதையை கவனித்தார்கள் அம்மாவும் மகளும். "வியாபார உலகத்தை தன் காலுக்கு கீழே வச்சிருந்த ஃபேமஸான பிசினஸ் மேன் அவரு""அப்படியா?""அவரைப் பத்தி சொசைட்டியில நிறைய ரூமர் உலாவிக்கிட்டு இருக்கு. சிலர், அவர் கோமாவில் இருக்கிறதா சொல்றாங்க. சிலர், அவர் இந்தியாவிலேயே இல்லன்னு சொல்றாங்க. சில பேர், அவருக்கு தலையில ஏற்பட்ட கடுமையான காயம் காரணமா பைத்தியம் பிடிச்சிட்டதா சொல்றாங்க. அதை விடு, உங்களுக்கு இந்த சம்பந்தம் எப்படி கிடைச்சது? அவரை உங்களுக்கு எப்படி தெரியும்?""அவர் என் ஃப்ரெண்ட் பார்கவியோட அண்ணன்""அப்படின்னா, அவருடைய உண்மை நிலைமை என்னன்னு உனக்கு தெரியுமா?" தெரியும் என்று தலையசைத்த ஆழ்வி, "அவர் ஒரு மனநோயாளி. எதாவது புதுசா, கவர்ச்சியா பார்த்தா தன்னோட கட்டுப்பாட்டை இழந்துடுவாரு. குறிப்பா, பொம்பளைங்க மேல அவருக்கு கட்டுப்படுத்த முடியாத ஈர்ப்பு இருக்கு. அவங்க மேல பாய்ஞ்சிடுவாரு" என்று அமைதியாய் கூறிய ஆழ்வியை, அதிர்ச்சியோடு பார்த்தார் தமிழரசி. தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co