15 அறுவைசிகிச்சை
15 அறுவைசிகிச்சை
மறுநாள்
உமாபதிக்கான வேலை நியமன உத்தரவு மற்றும் ஐந்து சதவிகித பங்குகளுக்கான பத்திரத்துடன் வந்தான் திவ்யமூர்த்தி.
'ஹரிதா வீட்டில் இருக்கிறாள்' என்பதை, அவனுக்குக் கண்களால் உணர்த்திய சிவகாமி,
"பேசாதீங்க." என்று மெல்லிய குரலில் எச்சரித்தார்.
ஆனாலும் அதைக் கேட்டுவிட்டாள் தன் அறையில் இருந்த ஹரிதா.
"அம்மா, நீங்க இப்ப ஏதாவது சொன்னீங்களா?" என அவள் கேட்டது, திவ்யமூர்த்திக்கு ஆச்சரியம் அளித்ததோடு மட்டுமின்றி, அச்சத்தையும் அளித்தது. அவளது புலங்களின் கூர்மை தான் அவனது அச்சத்திற்கு காரணம்.
"நானா? நான் எதுவும் சொல்லலயே." என்றார் சிவகாமி.
வெளியில் வந்த உமாபதி, திவ்யமூர்த்தியைப் பார்த்து புன்னகை புரிந்தான். தான் கொண்டு வந்த பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி திவ்யமூர்த்தி ஜாடை காட்டவும், யோசிக்காமல் அதில் கையெழுத்திட்டான் உமாபதி.
தன் அறையில் இருந்த ஹரிதாவைப் பார்த்தபடி அமர்ந்தான் திவ்யமூர்த்தி.
"ஹரி..." என்று அவளை அழைத்தான் உமாபதி.
"என்ன, உமா?"
"இங்க வா."
அவள் வெளியே வந்த முறையைப் பார்த்த திவ்யமூர்த்தி மேலும் வியந்தான். பழக்கப்பட்ட இடம் என்பதால், கைகளால் துழாவாமல் சிரமமின்றி நடந்து வந்தாள் ஹரிதா. சற்றே நின்று முகம் சுருக்கிய அவள்,
"இங்க வேற யாராவது இருக்காங்களா?" என்றாள்.
அது திவ்யமூர்த்தியை மேலும் திகைப்படையச் செய்தது.
"இங்க யார் இருக்கா? யாருமில்ல..."
"ஏதோ புது வாசனை வருது..."
"அப்படியா? எனக்கு வரலயே..."
"ஆமாம் எனக்கும் வரல," என ஒத்து ஊதினார் சிவகாமி.
"எனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு, ஹரி," என்றான் உமாபதி.
ஹரிதாவின் முகம் பிரகாசம் அடைந்தது.
"நிஜமாவா?"
"ஆமாம். இப்ப தான் அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைச்சிது."
"கங்கிராஜுலேஷன்ஸ்..."
"தேங்க்ஸ்."
"சுதா நம்ம வாழ்க்கையில வந்ததுல இருந்து நமக்கு எல்லாமே நல்லதா தான் நடக்குது." என்று கூறி அனைவரையும் சங்கடத்திற்கு ஆளாக்கினாள் ஹரிதா.
"பெங்களூர் போயிடலாம்னு நினைக்கிறேன்."
"நீ போய் தான் ஆகணும். நீ என்னைப் பத்திக் கவலைப்படாத. இன்னும் ஒரு மாசத்துல சுதா வந்துடுவாரு. அவர் என்னைப் பார்த்துக்குவார். நீ கெளம்பு." என்று கூறிய அவள், சற்று நிறுத்தி,
"அம்மா, நீங்க உமாவோட பெங்களூர் போக வேண்டிய அவசியம் இல்ல. உங்க புருஷன் கட்டின வீட்டை விட்டுப் போக உங்களுக்கு மனசு வராதுன்னு எனக்குத் தெரியும். உங்களையும் சுதா பாத்துக்குவார்."
சிவகாமி சங்கடத்தில் நெளிந்தார்.
"இல்ல, ஹரி, அம்மா என் கூட வர விருப்பப்படுறாங்க."
"அப்படியா?" என்று யோசனையில் ஆழ்ந்தாள்.
"உமா சாப்பாட்டுக்கு என்ன செய்வான்? நாம் எப்படி அவனைத் தனியா விட முடியும்?"
யோசனையுடன் தலையசைத்தாள் ஹரிதா.
"ஒன்னு செய், ஹரி, நீயும் எங்க கூட பெங்களூர் வந்துடு. சுதா இந்தியா வர்ற வரைக்கும் அங்க இரு."
அவள் சரி என தலையசைத்தாள்.
"எங்க கல்யாணம் வரைக்கும் நான் உங்க கூட இருக்கேன். சுதாவும் அப்படித்தான் சொல்லுவாரு."
அவள் மீண்டும் மீண்டும் சுதர்சனைப் பற்றிப் பேசுவதைக் கேட்ட திவ்யமூர்த்தி, தன் எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் கண்களை மூடினான்.
"உமா, நீ சுதாவுக்கு ஃபோன் பண்ணி உன் வேலையைப் பத்திச் சொன்னியா?"
"இல்ல. நீயும் அவன்கிட்ட எதுவும் சொல்லாத."
"ஏன்?"
"நம்ம அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம். என்ன சொல்ற?"
உதடு கடித்து புன்னகைத்த ஹரிதா,
"அவருக்குப் பயங்கர சர்ப்ரைஸா இருக்கும்." என்றாள் குதூகலமாய்.
"உன்னோட ஆப்பரேஷனுக்கு பிறகு நம்ம பெங்களூர் போகலாம். பெங்களூரில் இருந்து அவனுக்கு ஃபோட்டோஸ் அனுப்பலாம்."
"சரி."
"நம்ம ஹரியோட ஆபரேஷனை ஏன் பெங்களூர்ல செய்யக் கூடாது?" என்றார் சிவகாமி அவள் முகபாவத்தைக் கவனித்தவாறு.
"இல்லம்மா. வேண்டாம்." என்று அவசரமாய் மறுத்த ஹரிதா,
"சுதா ஏற்பாடு பண்ண ஹாஸ்பிடல்ல தான் நான் ஆபரேஷன் பண்ணிக்குவேன்." என்றாள்.
சிவகாமியும் உமாபதியும் திவ்யமூர்த்தியை இயலாமையோடு பார்த்தார்கள்.
அதே நேரம் ஹரிதாவுக்கு சுதர்சனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற அவள்,
"சுதா..." என்று குதுகளித்தாள்.
"நான் உனக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்."
"குட் நியூஸா? என்ன?"
"உன்னோட டாக்டர் ஃபோன் பண்ணாரு. உனக்கு கண்ணு கிடைச்சிடுச்சு."
"நெஜமாவா?"
"ஆமாம். இன்னும் ரெண்டு நல்ல உனக்கு ஆபரேஷன்."
"என்னால இதை நம்பவே முடியல."
"நம்ப முயற்சி பண்ணுங்க, மேடம்."
"ஐ லவ் யூ சோ மச்."
"ஐ டூ லவ் யூ சோ மச்."
மகிழ்ச்சி கண்ணீரோடு புன்னகை புரிந்தாள் ஹரிதா.
சிவகாமியும் உமாபதியும் திவ்யமூர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது பார்வை ஹரிதாவின் மீதே இருந்தது. அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைக் கூற முடியவில்லை. அவன் முகம் பாறையைப் போல் இருந்தாலும் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது.
"நான் உங்களைச் சீக்கிரமே பார்க்கப் போறேன்."
"சீக்கிரம் இல்ல. நான் இந்தியா வந்த பிறகு..."
"நடக்காது. நான் உமாவோட காலேஜ் ஆல்பத்துல உங்களைப் பார்த்துடுவேன்."
"அப்படி பண்ணாத, ஹரி."
"ஏன்?"
"அந்தப் ஃபோட்டோஸ்ல என்ன நல்லா இருக்க மாட்டேன்."
"ஆனா, உங்க காலேஜ் கேர்ள்ஸ் எல்லாம் உங்க பின்னாடி சுத்துனதா உமா சொன்னானே?"
"நான் இப்போ அதைவிட நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன்."
"எப்போ நல்லா இருக்கீங்கன்னு நான் சொல்றேன்."
"ஹரி..."
"சரி, சரி, நீங்க வர்ற வரைக்கும் பார்க்க மாட்டேன்..."
"சமத்து பொண்ணு... சரி, இதைச் சொல்லத் தான் ஃபோன் பண்ணேன்."
"சரி, வழக்கம் போல ராத்திரி பேசலாம்."
"ஓகே, பை."
"பை." அழைப்பைத் துண்டித்தவள்,
"உமா, எனக்குக் கண்ணு கிடைச்சிடுச்சு." என்றாள்.
உமாபதி திவ்யமூர்த்தியைப் பார்க்க, அவன், 'மேற்கொண்டு பேசு' என்பது போல் சைகைச் செய்தான்.
"வாவ்... இது உண்மையிலேயே ரொம்ப நல்ல நியூஸ். நான் ஹாஸ்பிடலுக்குப் போய் உன் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்."
சரி என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள் ஹரிதா.
திவ்யமூர்த்தி அங்கிருந்து வெளியேறினான். சிவகாமியும் உமாபதியும் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.
"உங்களால அவ மனசை மாத்த முடியும்னு நினைக்கிறீங்களா?" என்றான் உமாபதி.
"என்னோட வசதியைப் பார்த்து அவங்க மனசு மாறும்." என்றான் நம்பிக்கையோடு.
"நீங்க ரெண்டு பேரும் நான் சொல்றதை மட்டும் செய்யுங்க. எதுவும் தப்பா போகக்கூடாது."
அவர்கள் பூம்பூம்மாடு போல் தலையசைத்தார்கள்.
.......
ஹரிதாவின் அறுவைசிகிச்சைக்கு அனைத்தும் தயார். சுதர்சனுக்கும் ஹரிதாவுக்கும் ஆர்வம் தாங்கவில்லை. அவளைப் பார்க்காமல் எப்படி வெளிநாட்டில் இருப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. இருவரும் தங்கள் வாழ்க்கையின் மிகவும் அற்புதமான அந்தக் காலகட்டத்தை எதிர்கொள்ள தயாரானார்கள்.
ஹரிதாவின் அறுவை சிகிச்சை நல்லபடியாய் முடிந்தது. அவள் கண்களில் இருந்தக் கட்டு இன்னும் பிரிக்கப்படவில்லை.
"ஹரி, இந்தா, இந்த ஜூசைக் குடி." என்றார் சிவகாமி.
எழுந்து அமர்ந்த ஹரிதா,
"அம்மா, என் ஃபோன் எங்க? ஏன் சுதா எனக்கு ஃபோனே பண்ணல?" என்றாள்.
"ஃபோனா? அது உன்கிட்ட தானே இருந்தது? நீ எங்க வெச்ச?" என்றார்.
"என் பேக்ல தான் வைச்சிருந்தேன். ஆபரேஷன் தியேட்டர் போறதுக்கு முன்னாடி கொடுத்துட்டு போனேனே..." என்றாள் பதற்றத்தோடு.
"அதுல உன்னோட ஃபோன் இல்லயே. அதை நீ ஏன் என்கிட்ட கொடுக்கல?"
"அய்யய்யோ, இப்போ நான் சுதா கிட்ட எப்படி பேசுவேன்? உமா எங்க? அவன் எப்ப வருவான்? சுதா எனக்கு ட்ரை பண்ணி இருப்பாரு. எனக்கு லைன் கிடைக்கலன்னா அவர் உமாவுக்குத் தான் ஃபோன் பண்ணுவார்."
"உமா வேலைக்குப் போயிருக்கான். லேட்டா தான் வருவான். அது உனக்குத் தெரியாதா?"
"அவனுக்குத் தான் பெங்களூர்ல வேலை கிடைச்சிடுச்சே... அப்புறம் இன்னும் ஏன் இந்த டெலிவரி பாய் வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்கான்?"
"நம்ம பெங்களூர் போற வரைக்கும் நமக்குப் பணம் தேவையாச்சே... இன்னும் நமக்கு நிறைய செலவு இருக்கு. பெங்களூருக்கு ஷிஃப்ட் ஆகுறதுக்கு எவ்வளவு செலவாகும் தெரியும்ல? அங்க வீடு வேற தேடணும்..."
"சரி, உங்க ஃபோன் எங்க?"
"என்கிட்ட தான் இருக்கு."
ஹரிதா நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஒருமுறை அவள் சிவகாமியின் எண்ணில் இருந்து சுதர்சனுக்கு ஃபோன் செய்திருந்ததாள் அல்லவா? அவன் அந்த எண்ணைத் தன் கைபேசியில் சேமித்து வைத்திருப்பான் என்று அவள் நம்பினாள். ஆனால் சிவகாமியும் உமாபதியும் தங்கள் எண்களை மாற்றிவிட்ட விஷயம் அவளுக்குத் தெரியாது. தன் கைபேசியைத் தவற விட்டுவிட்ட விஷயத்தைச் சுதர்சனிடம் கூற வேண்டும் என்று நினைத்தாள் அவள்.
மறுப்புறம்,
சுதர்சன் பொறுமை இழந்து கொண்டிருந்தான். ஹரிதாவுக்கும் உமாபதிக்கும் அவன் மாறி மாறி ஃபோன் செய்தபடி இருந்தான். ஆனால் அவர்களது கைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. ஹரிதாவின் அறுவை சிகிச்சை முடிந்துவிட்ட விஷயம் அவனுக்குத் தெரியும். அவளது மருத்துவரிடம் அவன் அதைப் பற்றிப் பேசி இருந்தான்.
வேறு வழியில்லாமல் அவளது மருத்துவருகே ஃபோன் செய்தான். அவர் அந்த அழைப்பை ஏற்றார்.
"சொல்லுங்க, சுதர்சன்."
"நீங்க ஹரிதாவை செக் பண்ண எப்போ போவீங்க, டாக்டர்?"
"அவங்களைப் பார்க்கத் தான் போறேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்."
"ஹரிதாவோட ஃபோனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. அவுட் ஆஃப் ஆர்டர்ல இருக்கு. நான் அஞ்சு நிமிஷம் கழிச்சு ஃபோன் பண்றேன். உங்க ஃபோனைக் கொஞ்சம் அவகிட்ட கொடுக்க முடியுமா டாக்டர்? ப்ளீஸ்..."
"ஷ்யூர்..."
"தேங்க்யூ, டாக்டர்."
நகத்தைக் கடித்தபடி காத்திருந்தான் சுதர்சன். சரியாய் ஆறு நிமிடம் கழித்து மருத்துவரின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தான். அவர் அந்த அழைப்பை ஏற்று,
"ஹரிதா, சுதர்சன் லைன்ல இருக்காரு." என்று தன் கைபேசியை அவளிடம் கொடுத்தார், சிவகாமிக்கு அதிர்ச்சி அளித்து.
கைபேசியை அவரிடமிருந்து வாங்கி பேசினாள் ஹரிதா.
"சுதா..."
"உன் ஃபோனுக்கு என்ன ஆச்சு? ஏன் அது அவுட் ஆஃப் ஆர்டர்ல இருக்கு?"
"என் ஃபோன் தொலைஞ்சு போச்சு."
"என்னது? எப்போ? எதுக்காக உமா என்கிட்ட எதுவும் சொல்லல?"
"அவன் உங்களுக்கு ஃபோன் பண்ணலயா?"
"அவனோட ஃபோனும் அவுட் ஆஃப் ரேஞ்ச்."
"அப்படியா?"
"அவன் டெலிவரி கொடுக்க வெளியில போயிருப்பான்னு நினைக்கிறேன்."
"ம்ம்ம்..."
"நான் உனக்கு ஒரு புது ஃபோன் வாங்கி, யார்கிட்டயாவது கொடுத்து அனுப்புறேன்."
"சரி, என்னோட ஆப்ரேஷன் முடிஞ்சிடுச்சு."
"ரொம்ப வலிக்குதா?"
"ஆமாம். கண்ணுல மண் விழுந்த மாதிரி உறுத்திகிட்டே இருக்கு."
"எல்லாம் சரியாயிடும், டா. கொஞ்சம் பொறுத்துக்கோ."
"நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்."
"நானும் தான்."
"உங்களைப் பாக்கணும்னு ரொம்ப ஆசையா காத்துக்கிட்டு இருக்கேன்."
"காண்ட்ராக்ட் முடிஞ்ச அடுத்த நாள், நான் உன் முன்னாடி இருப்பேன்."
"ம்ம்ம்..."
"பை."
"பை." அழைப்பைத் துண்டித்து விட்டு, கைபேசியை மருத்துவரிடம் கொடுத்தாள்.
"தேங்க்யூ, டாக்டர்"
அதை வாங்கிக்கொண்டு அவளைச் சோதித்தார் மருத்துவர்.
உமாபதியை அழைத்து அவனிடம் விஷயத்தைக் கூறினார் சிவகாமி. அவன் எரிச்சல் அடைந்தான். எப்படி சுதர்சனைத் தடுப்பதென்று அவனுக்குப் புரியவில்லை. வேறு வழியின்றி, தனது பழைய சிம் கார்டின் மூலம் ஹரிதாவை அவனிடம் பேச வைத்தான்.
ஹரிதாவின் கண்ணில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. சிவகாமியையும் உமாபதியையும் பார்த்து சந்தோஷமாய் அணைத்துக் கொண்டாள்.
"டாக்டர் நாங்க வீட்டுக்குப் போகலாமா?"
"தாராளமா போகலாம்."
அப்பொழுது உமாபதிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதை ஏற்ற அவன்,
"என்னது? எப்போ? எப்படி?" என்றான்.
ஹரிதாவை அதிர்ச்சியோடு பார்த்த அவன்,
"சுதாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்." என்றான் அவளுக்கு அதிர்ச்சி அளித்து.
கண் சிமிட்டும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co