Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

3 திருமணம்

NiranjanaNepol

3 திருமணம்

சேதுபதி குடும்பம் எனக்காக கொடுத்த பட்டு வேட்டியை வெறிச்சி பார்த்துக்கிட்டு இருந்தேன். அது அவங்க குடும்பவளத்தை கூச்சல் போட்டு சொல்லிக்கிட்டு, கை அகல தங்க ஜரிகையோட அலட்டலா இருந்தது. எனக்கு வேட்டி சட்டை போடுறது எப்பவுமே கம்ஃபர்ட்டபிலா இருக்காது. எனக்கு கோட் சூட் தான் வசதி. ஆனா, இது என் கல்யாணம். இன்னைக்கு நான் வேட்டி கட்டித் தான் ஆகணும். ஏன்னா அது சேதுபதி குடும்பத்தோட கௌரவம் பத்தின விஷயம்.

என் குடும்பத்துல இருந்த எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க, என்னைத் தவிர.. ஹாசினியும் தான்.

அப்ப தான் எனக்கு அவ ஞாபகம் வந்தது. அவ எங்க இருக்கா? இந்தக கல்யாணத்தை நிறுத்தாம போனதுக்காக என்னை எப்படி எல்லாம் வச்சு செய்யப் போறாளோ தெரியல. நான் எப்பவுமே பொண்ணுங்கள மரியாதை இல்லாம பேசுறவன் இல்ல. எங்க அம்மா என்னை அப்படி வளர்க்கல. ஆனா நான் அவகிட்ட மரியாதை இல்லாம பேசினேன். அவ பேசின விதம், என்னை அப்படிப் பேச வச்சிது. அவ அரச குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணா இருந்தா என்ன? அவளால மரியாதையா பேச முடியாதா? அவளுக்கு இந்தக கல்யாணத்துல விருப்பம் இல்லனா, அதைக் கொஞ்சம் பொலைட்டா சொல்லி இருக்கலாமே! நான் எப்படித் தான் ஒவ்வொரு நாளும் அந்தபு பொண்ணை ஃபேஸ் பண்ணப் போறேன்னு தெரியல. அவ கூட ஒரே வீட்ல இருக்கப் போறத நினைச்சாலே எனக்கு கடுப்பா இருந்தது.

அப்போ, என் அக்கா செம்ம குதுகலமா என் கிட்ட வந்தாங்க.

"நீ இன்னைக்கு நிச்சயம் மயக்கம் போட்டு தான் விழப்போற" ன்னு எங்க அக்கா சொன்னது, ஏன்னு எனக்குப் புரியல.

"மயக்கமா? எதுக்கு, கா?"

"இன்னைக்கு ஹாசினி செம்ம்ம்ம அழகா இருக்கிறத பார்த்துதான்..." ன்னு சொல்லிட்டு சிரிச்சாங்க.

அட போங்கடான்னு இருந்தது எனக்கு.

"ஹாசினி சாதாரணமாவே ரொம்ப அழகா இருப்பாங்க. இன்னைக்கு வேற லெவல்..." மறுபடியும் சிரிப்பு...

எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல.

"உன் மனசுல என்ன இருக்குன்னு எங்களுக்குத் தெரியும். எல்லாமே உன் கையில தான் இருக்கு. நீ நெனச்சா அதை உனக்குச் சாதகமா மாத்திக்க முடியும். அதைப் புரிஞ்சுக்கோ." எங்க அக்கா கெஞ்சினாங்க.

சரின்னு மெதுவா தலையசைச்சேன்.

"ஹாசினியோட முகம் பளபளன்னு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? அவங்களைப் பார்த்த உடனே, நீ உன் கவலை எல்லாம் மறந்துடுவ பாரு..." ன்னு இன்னும் ஒரு பிட்டைப் போட்டாங்க அக்கா.

அவ முகம் பளபளன்னு இருக்குறதுல என்ன ஆச்சரியம் இருக்கு? அவ தான் இளவரசி ஆச்சே!

என்னை மேடைக்கு வரச் சொல்லி ஐயர் சொன்னார். அக்காவும் மாமாவும் என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. ரொம்ப ஆடம்பரமா அலங்காரம் பண்ணி இருந்த மேடையில உட்க்காந்து, நான் ஐயர் சொன்னதை எல்லாம் செஞ்சேன். எல்லாருக்கும் அவங்க கல்யாண நாள் ரொம்ப ஸ்பெஷலான நாளா இருக்கும். எனக்கும் அப்படித் தான் இருந்திருக்கும்... ஒருவேளை, ஹாசினி கல்யாண பொண்ணா இல்லாம இருந்திருந்தா... என்னைப் பொறுத்த வரைக்கும், இந்த கல்யாணம் ஒரு ஜெயில். நான் அன்னைக்கு ரொம்ப பலவீனமா ஃபீல் பண்ணேன். என்னால ஓடவும் முடியல, ஒளியவும் முடியல. அந்தக் கல்யாணம் என் மேல திணிக்கப்பட்ட ஒரு கட்டாயம்!

பண்டிதர் கல்யாண பொண்ணைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னார். ஹாசினியோட ரூம் இருந்த பக்கமா, என் தலை ஆட்டோமேட்டிக்கா திரும்புச்சு. அவளைப் பத்தி எங்க அக்கா செஞ்ச வர்ணனை தான் அதுக்குக் காரணம்.

ரூமை விட்டு வெளியில வந்த அடுத்த நிமிஷம், கேமராக்களோட ஃபிளாஷ் மழையில நனைஞ்சா ஹாசினி. அந்தப் பெரிய கல்யாண மண்டபத்துல கூடியிருந்த அத்தனை பேரோட கண்ணும் அவ மேல தான் இருந்தது. சிலர் அவ போட்டிருந்த நகைகளைப் பாத்தாங்க... பலர் அவ போட்டிருந்த நகையை விட அதிகமா ஜொலிச்ச அவ முகத்தையே பார்த்துகிட்டு இருந்தாங்க.

இது தான் ஃபர்ஸ்ட் டைம் நான் ஹாசினியைப் பாக்குறது. ஹானஸ்ட்டா சொல்றேன், ஒருவேளை அவ என்கிட்ட ஃபோன்ல பேசாம இருந்திருந்தா, நான் எதைப் பத்தியும் கவலைப்படாம, அவ மேல இருந்து என் கண்ணை எடுக்காம, வெக்கமே இல்லாம அவளை சைட் அடிச்சிருப்பேன். சத்தியமா அப்படி ஒரு பொண்ணை நான் பாத்ததே இல்ல. அவ நிச்சயமா ஒரு இளவரசி தான். அவளை அடைய எத்தனை பேரை வேணாலும் போட்டுத் தள்ளலாம். சந்தேகமே இல்லாம அவ ஒரு தேவதை.

அவ என் பக்கத்துல வந்து உட்கார்ந்தப்போ, அவ பேசுன அவமரியாதையான வார்த்தை எனக்கு ஞாபகம் வந்தது. அதுக்கப்புறம் அவளைப் பாக்கணும்னு எனக்கு எங்கிருந்து ஆர்வம் இருக்கப் போகுது? அவ அழகா இருந்தா... ரொம்ப ரொம்ப அழகா இருந்தா... அதனால எனக்கு என்ன?

பண்டிதர் மந்திரத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தாரு. ஆனா என் காதுல அதெல்லாம் விழவே இல்ல. அவ என்கிட்ட பேசினது தான் கேட்டுகிட்டே இருந்தது.

பண்டிதர் என்கிட்ட தாலியைக் கொடுத்தப்ப தான் எனக்கு சுயநினைவு வந்தது. அதை வாங்கி, ஹாசினியோட கழுத்துல கட்டினேன்... அந்த வேண்டாத உறவுல என்னையும் சேர்த்து கட்டினேன்.

நான் தாலி கட்டும் போது, அவ முகத்தை ரொம்ப பக்கத்துல பார்த்தேன். அக்கா சொன்ன மாதிரியே அவ முகம் அப்படிப் பளபளத்தது. அவ தலை குனிஞ்சு இருந்தா. ஒருவேளை என் முகத்தைப் பார்க்க விரும்பாம இருந்திருக்கலாம்.

எங்க ரெண்டு பேருக்குமே அந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல. எங்க கூடப் பிறந்தவங்களுக்காக, அதை நாங்க ஏத்துக்க வேண்டியதா போச்சு. என்னைப் பொறுத்தவரை, அது என் தங்கச்சியோட சந்தோஷம் மட்டுமில்ல, எங்க வியாபார எதிர்காலமும் கூட. அதனால அதுல மறுத்து பேச எதுவுமே இல்ல. என் குடும்ப நலனுக்காக நான் பலிகடாவானேன்.

இந்த நிமிஷத்துல இருந்து நான் என் சந்தோஷத்தை மொத்தமா தொலைக்கப் போறேன். நான் சந்தோஷமா இருக்க போறதும் இல்ல, என் வாழ்க்கையை நினைச்சு பரவசம் அடையுற வாய்ப்பும் எனக்குக் கிடைக்கப்போறதில்ல.

எல்லாரும் கிளம்புற நேரம் வந்தது. கண் கலங்காம, ஸ்ட்ராங்கா இருந்த என் புது பொண்டாட்டியைப் பார்த்து எனக்குக் குழப்பமா இருந்தது. அவ அண்ணன் ஒருத்தன் தான் அவளுக்காக ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருந்தான். நான் பல கல்யாணத்தைப் பார்த்திருக்கேன். கடைசியா, கிளம்பும்போது அழுதே தீரணும் அப்படிங்கறது எழுதப்படாத ஒரு சட்டம். இது தான் முதல் முறை, ஒரு பொண்ணு தன் குடும்பத்தை விட்டு பிரியறதுக்காக அழாம இருந்தது... அந்த ஒருத்தி, என் ஒய்ஃப்.

அந்தப் பக்கம், என் தங்கச்சி, எங்க அம்மாவையும் அக்காவையும் கட்டிப்பிடிச்சுக்கிட்டு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருந்தா. அவங்களும், அவளுக்குச் செமயா கம்பெனி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அது எல்லா கல்யாணத்துலயும் வழக்கமா நடக்கிறது தான். ஆனா என் ஒய்ஃப், வேற ஒருத்தர் கல்யாணத்துக்கு வந்தா மாதிரி ரொம்ப சாதாரணமா இருந்தா.

அப்போ, என் பக்கத்துல இருந்த ஹாசினிகிட்ட, அவளோட அம்மாவும் அப்பாவும் வந்தாங்க. அவளோட அம்மா, வைர சுரங்க மாதிரி ஜொலிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவளோட அப்பா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி காட்டிக்க ட்ரை பண்ணாரு. ஆனா அது அவரால முடியல. என்ன இருந்தாலும் அப்பா இல்லயா?

"ஓ மை டியர்! நீ இப்போ நம்ம ஃபேமிலியோட சார் அம்பாசிடர். நம்ம குடும்ப கவுரவம் உன் கைல தான் இருக்கு. எது செய்றதுக்கு முன்னாடியும், யோசிச்சு செய். நீயும் தலை நிமிர்ந்து நடந்து, எங்களையும் அப்படியே நடக்க வை." ன்னு ரொம்ப மிடுக்கா, வலிய உணர்ச்சிவசப்பட்டு பேசினாங்க மிஸஸ் சேதுபதி.

எதுவும் சொல்லாம அமைதியா அவங்களைப் பார்த்துகிட்டு நின்னா ஹாசினி. அவ அவங்களைக் கட்டிப்பிடிக்கவும் இல்ல, ஆசீர்வாதம் வாங்கவும் இல்ல. அவளோட அப்பா தான் அவளைக் கட்டிப் பிடிச்சி, நெத்தியில முத்தம் கொடுத்தார். என் கண்ணுல, உணர்ச்சியே இல்லாத கல்லால ஆன சிலை மாதிரி இருந்தா ஹாசினி.

சேதுபதி என் பக்கம் திரும்பினார். அது தான் எங்களோட அஃபிஷியலான முதல் சந்திப்பு. என் கையைப் பிடிச்சிக்கிட்டு,

"என் குழந்தையைப் பார்த்துக்கோங்க." நா தழுதழுக்க என்கிட்ட சொல்லி, என்னைச் சங்கடபடுத்தினார்.

நான் ஹாசினியைப் பார்க்க, அவ அவரைப் பார்க்காம நின்னுக்கிட்டு இருந்தா. நான் சரின்னு தலை அசைச்சேன்.

என்கிட்ட ஓடி வந்த நந்தினி, என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு,

"அண்ணா, ஐ வில் மிஸ் யூ..." ன்னு அழுததைப் பாத்தப்போ, எனக்குத் தொண்டை அடைச்சிது.

அவ கையைப் பிடிச்சி சூர்யாகிட்ட கொடுத்தேன்.

"நான் பார்த்துக்கிறேன்" ன்னு, வாய்மொழி உறுதி சூர்யா கிட்ட இருந்து வந்தது.

ஹாசினியை சூர்யா பார்த்த நேரம், அவ ரொம்ப மென்மையா ஸ்மைல் பண்ணா. நான் அசந்து போயிட்டேன். அவ ஸ்மைல் பண்ணும்போது அவ்வளவு அழகா இருந்தா! நான் சில நொடி என்னை மறந்தேன்.

சூர்யாவும் நந்தினியும் அவங்க காரை நோக்கி போனாங்க. அதேநேரம், நானும் ஹாசினியும் எங்க காருக்கு வந்தோம். ரொம்ப ரொம்ப பட்டாடோபமா அலங்கரிக்கப்பட்டிருந்த ரோல்ஸ் ராய்ஸ் எங்களுக்காகக் காத்திருந்தது. அது என் மாமியார் வீட்ல எனக்குக் கொடுத்த கல்யாண பரிசு.

நாங்க கார்ல உட்காந்த உடனே, கசப்பைச் சுமந்த எங்க வாழ்க்கை பயணம் ஆரம்பிச்சது. நானோ, ஹாசினியோ, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கவே இல்ல. அடுத்தவருக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்ச பிறகு, பார்த்துக்கிற ஆர்வம் எப்படி வரும்?

என் மாமியார் வீட்ல எனக்குக் கொடுத்திருக்குற பங்களாவுல, என் புது பொண்டாட்டியோட நாளைக்கு நான் குடி போகணும்னு நினைக்கும் போது, எனக்கு எரிச்சலா வந்தது. அந்த வீடு, எனக்கு சேதுபதி குடும்பத்தோட இன்னொரு கிஃப்ட்.

என் குடும்பத்தோட இருக்கணும்னு நான் நினைச்சது, என்னோட வாழ்நாள் கனவு! நாளைக்கு அது தரமாட்டமாகப் போகுது. குடும்ப பாங்கான பொண்ணு தான் எனக்கு மனைவியா வரணும்னு நான் ஆசைப்பட்டேன். கணவனோட அன்பு கிடைக்காத என் அம்மாவுக்கு, அட்லீஸ்ட் என்னோட மனைவியாவது மன நிம்மதியைத் தரணும்னு நான் ஆசைப்பட்டேன். ஆனா, அதை எல்லாம் நான் ஹாசினி கிட்ட எதிர்பார்க்க முடியாது. ஏன்னா அவ அரச பரம்பரையோட வெளிச்சத்தில் வளர்ந்தவ. அவகிட்ட இருக்கிற எல்லாமே ஆடம்பரமானது. அவளோட பார்வை கூட தலை கணத்தோட தான் இருக்கப் போகுது...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co